01st January 2025 15:23:56 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் படையலகுகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி 29 டிசம்பர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
துப்பாக்கி சூட்டு போட்டி, படகோட்டுதல் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதியின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டன. நிகழ்வின் போது, கரப்பந்து போட்டியில் 1 வது இயந்திரவியல் காலாட் படையணி சிறந்த படையணியாகவும் , 3 வது இயந்திரவியல் காலாட் படையணி படகோட்டத்தில் வெற்றி கிண்ணத்தை பெற்றதுடன், மேலும் துப்பாக்கிச் சூட்டு போட்டியில் 4 வது இயந்திரவியல் காலாட் படையணி சிறந்து விளங்கின. தேசிய அளவில் இயந்திரவியல் காலாட் படையணி நிறங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இடம்பெற்ற படகோட்டம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் சிறந்து நபர்களுக்கு பண பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.