30th April 2024 20:19:15 Hours
2024 ஆம் ஆண்டுக்கான அதிகாரிகளின் பயிற்சி நாள், இயந்திரவியல் காலாட் படையணியில் 25 ஏப்ரல் 2024 அன்று சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏ.கே பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
இளம் அதிகாரிகளுக்கான உடற்பயிற்சி மற்றும் அணிநடைப் பயிற்சியுடன் அன்றைய பயிற்சி நாள் ஆரம்பிக்கப்பட்டது. மேஜர் பி.எம்.ஏ.ஐ.யூ ஒபயசேன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களினால் 'ட்ரோன் போர்' என்ற தலைப்பில் அறிவூட்டும் விரிவுரை நிகழ்த்தப்பட்டது. மேலும் வருகை தரு விரிவுரையாளர் கலாநிதி கிலோஷனி ஹெந்தாவிதாரண அவர்கள் பகிர்ந்து கொண்ட மேலதிக நுண்ணறிவுகளால் கலந்துகொண்டவர்கள் மேலும் பயனடைந்தனர்.