Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th September 2024 18:06:11 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரால் தம்புள்ளை முதியோர் இல்லத்தில் சிரமதான பணி

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலந்தி வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தம்புள்ளை முதியோர் இல்லத்தில் சிரமதான பணி 28 செப்டம்பர் 2024 அன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் முதியோர் இல்லத்தின் 57 முதியோர்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சியை நடாத்தியதுடன் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் தம்புள்ளை மாநகர சபையின் ஆதரவுடன் இந்த முயற்சியை மேற்கொண்டனர்.