Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2021 22:34:02 Hours

இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்!

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் நத்தார் வாழ்த்து செய்தி இயேசு கிறிஸ்துவின் சுபீட்சத்துக்கான பிறப்பை கொண்டாடும் வகையில் உலகவாழ் மக்களால் ஒற்றுமை , சமாதானம் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் சுபீட்சமான நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் கிறிஸ்தவ அங்கத்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

சமாதானத்தின் இளவரசராக பெத்லேஹெம் நகரின் சிறியதொரு மாட்டு தொழுவத்தில் பிறந்த அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் விடுதலையின் வழியை காண்பித்ததுடன், சுபீட்சத்தின் இளவரசர் பிறந்த நாள் தொடக்கம் அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் வரையில் மற்றையவர்களை பாவச் செயல்களிலிருந்து மீட்பதற்காகவே வாழ்க்கை தியாகம் செய்து அதனூடாக மனிதாபிமானம் மற்றும் தருமத்தை போதித்தார்.

இயேசு கிறிஸ்து அவர்களால் போதிக்கப்பட்ட போதனைகளுக்கு அமைவாகவே வாழ்கையை வடிவமைத்துக்கொண்ட அவர் அன்பு, இரக்கம், தியாகம், பொறுமை, கருணை, ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற மனிதாபினமான பண்புகள் இலங்கை இராணுவத்தில் சேவையாற்றும் கிறிஸ்தவ அங்கத்தர்களான நீங்கள் நாட்டினதும் நாட்டில் வசிக்கும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளின் போது பின்பற்றி இயேசு கிறிஸ்துவின் சிந்தனைகளுக்கமையாவான உலகத்தை உருவாக்க ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.

நத்தார் தினத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் அதேநேரம், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்ளவும் உதவியற்ற மக்களுக்கு உதவிகளை வழங்குவதன் ஊடாக உலகில் அன்பை பரவச் செய்யவும் இராணுவ வீரர்களான நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நாட்டின் சகல பகுதிகளினதும் தாய் நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு கிறிஸ்தவ தருமத்திற்கமைய சமாதானம் மற்றும் சகோரத்துவத்தை நாட்டிற்குள் பரவச் செய்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்த அர்பணிப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் சமதானம், மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த நத்தார் பண்டிகையாகட்டும் என வாழத்துகிறேன் !!

ஷவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீசி பீஎல்சீ எம்பில்

ஜெனரல்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி