Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2023 18:09:33 Hours

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இந்திய போர்வீரர்களுக்கு நினைவு அஞ்சலி

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டி, 1987-1990 காலப்பகுதியில் இலங்கையில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த இந்திய அமைதி காக்கும் படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், யாழ். பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையின் நினைவு தூபியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரக அலுவலகத்துடன் இணைந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

நினைவுத்தூபியில், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திரு. ராகேஷ் நட்ராஜ் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி ஆகியோர் வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படை போர் வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு இந்த நினைவு விழாவில் கலந்துகொண்டனர்.