18th May 2023 22:17:06 Hours
கொழும்பு இராணுவ மருத்துவமனையின் "ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்" எனும் திட்டத்தின் கீழ் புதன் கிழமை (17) இலங்கை பொறியியல் சேவைகள் படையணி தலைமையக விரிவுரை மண்டபத்தில் விரிவுரை இடம் பெற்றது.
சர்வாங்க வைத்திய நிபுணர் பிரிகேடியர் (ஓய்வு) வைத்தியர் ஏஎஸ்எம் விஜேவர்தன யூஎஸ்பீ அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தொற்றாத நோய்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பொதுவான உடல் நலப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் விரிவுரையை நிகழ்த்தினார்.
மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 அதிகாரிகள் மற்றும் 90 சிப்பாய்கள் மேற்குப் பாதுகாப்புப் படைத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டனர்.