28th July 2023 19:29:42 Hours
ஆரோக்கியமான இராணுவம்-ஆரோக்கியமான தேசம் எனும் விரிவுரை தொடரின் 2 வது கட்ட தொடர்ச்சியாக கொழும்பு இராணுவ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று, படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் 72 இராணுவ அதிகாரிகள், 26 கடற்படை அதிகாரிகள்,24 விமான படை அதிகாரிகள், 25 வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் 01 பொலிஸ் அதிகாரி உட்பட 148 அதிகாரிகளுக்கு 'தொற்றா நோய்கள்' என்ற கருப்பொருளில் விரிவுரையை நடாத்தியது.
அதற்கமைய உடலியல் நிபுணர் பிரிகேடியர் (டாக்டர்) ஏ.எஸ்.எம் விஜேவர்தன யுஎஸ்பீ அவர்களால் 'ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான ரகசியங்கள்', பிரேவே கேணல் பி.எல். ரணசிங்க கேஎஸ்பீ அவர்களால் 'பயிற்சிகளின் நன்மைகள்' மற்றும் கேப்டன் ஏ.சி.கே உடுகம அவர்களால் 'ஆரோக்கியமான உணவு உங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது' என்ற தலைப்பிலும் விழிப்புணர்வு விரிவுரை நிகழ்த்தப்பட்டன.
மேலும், சீருடை அணிந்து வேலை நேரத்தில் மேற்கொள்ளக்கூடிய சிறிய உடல் பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பிரதித்தளபதி பிரிகேடியர் ஏபீ விக்ரமசேகர யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.