Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2023 20:22:27 Hours

ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தினால் தொகுக்கப்பட்ட இராணுவக் கோட்பாடு வெளியீடுகள் (தொகுதி -2) இராணுவத் தளபதிக்கு வழங்கல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் (18) காலை இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தினால் தொகுக்கப்பட்ட 'சிறப்பு நடவடிக்கைப் படை' கோட்பாடு, நான்கு இராணுவ கள கையேடுகள் மற்றும் புலனாய்வு தொடர்பான 'பொது பணியாளர்கள் வெளியீடு' ஆகியவற்றின் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டார்.

ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிடபிள்யூஎ செனவிரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியான, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் ஏனைய அழைப்பாளர்களை வரவேற்கப்பட்டதுடன் இராணுவக் கோட்பாட்டு வெளியீடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பிரதம அதிதியால் வெளியிடப்பட்டது.

இதன்போது உரையாற்றிய இராணுவத் தளபதி, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் முயற்சியைப் பாராட்டியதுடன், புதிய வெளியீடுகளில் உள்ள உள்ளடக்கங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், இந்த பணிப்பகத்தினரால் பொருத்தமான முன்னோக்குகள் விரைவுபடுத்தப்பட்ட முயற்சியில் இலங்கையில் உள்ளவர்களுக்குக் கற்பிக்கவும் அனைவரையும் வலியுறுத்தினார்.

இராணுவப் பொறுப்புகள் மற்றும் குறிப்பிட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள், விதிகள் மற்றும் பயன்பாட்டு முறைகளை அந்த வெளியீடுகளில் தனித்தனியாகக் குறிப்பிடபட்டிருக்கின்றன.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ உட்பட பல உயர் அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.