04th October 2023 21:38:31 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி மற்றும் 613 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஏடிஎன்ஆர் கன்னங்கர ஆகியோர் எதிர்வரும் 74 ஆவது இராணுவ ஆண்டு நிறைவை ஒட்டி, செப்டெம்பர் 27 ஆம் திகதி கம்புருபிட்டிய ‘அபிமன்சல 2’ நல விடுதியில் புனர்வாழ்வு பெற்றுவரும் போர்வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கத்துடன் விஜயம் செய்தனர்.
சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களுடன் உரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களது குடும்ப நலன்களையும் கேட்டறிந்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒவ்வொரு போர் வீரருக்கும் சிறப்புப் பரிசுப் பொதி வழங்கப்பட்டதுடன், இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு தளபதியின் வாழ்த்தையும் தெரிவித்தனர்.