01st April 2024 18:21:44 Hours
ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி எண்-38 இன் விடுகை அணிவகுப்பு 29 மார்ச் 2024 அன்று ஹெனானிகல ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஆறுமாத அடிப்படை பயிற்சி பாடநெறியை நிறைவு செய்த 523 சிப்பாய்கள் பல்வேறு படையணிகளுக்கு பணியமர்த்தப்பட்டதுடன் நிகழ்வின் போது அவர்களது படையணிகளின் நிறங்களைப் பெற்றனர். இசைக்குழு மற்றும் உடற் பயிற்சி காட்சிகள் நிகழ்விற்கு கவர்ச்சியையும் உற்சாகத்தையும் சேர்த்தன.
பாடநெறியின் போது சிறந்து விளங்கிய தனிநபர்களுக்கு பின்வரும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:
சிறந்த குறிப் பார்த்து சுடல் : டபிள்யூ.டபிள்யூ.ஜி.கே. மெண்டிஸ்
சிறந்த சிப்பாய்: கே.டி.எம்.எஸ். பிரேமானந்த
சிறந்த ஆட்சேர்ப்பு சிப்பாய் : சிப்பாய் சி.சி. மதநாயக்க
மேலும், பாடநெறி பயிற்றுவிப்பாளர்களின் சேவையைப் பாராட்டி பின்வரும் பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டன:
சிறந்த குழு தளபதி: கெப்டன் எச்.எல்.ஏ.பீ. லியனாராச்சி இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி
சிறந்த குழு சார்ஜன்: சார்ஜன் கே.ஏ.டி. அசங்க
சிறந்த பிரிவு கட்டளையாளர்: லான்ஸ் கோப்ரல் டிடபிள்யூ.எஸ்எம் ஹேரத்
சிறந்த உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்: லான்ஸ் கோப்ரல் என்.ஏ.எம்.யூ. அபேசுந்தர