Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2024 12:02:52 Hours

ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் 2024ல் இலங்கை இராணுவ வீரருக்கு வெண்கலப் பதக்கம்

ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் 2024 இல் 59 கிலோ எடைப் பிரிவில் 12 வது இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த அதிகாரவாணையற்ற அதிகாரி-I எஸ்.சுமுது பிரதீப் அவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். இந்நிகழ்வு 2024 டிசம்பர் 01 முதல் 10 வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றதுடன், இப்போட்டியில் அதிகாரவாணையற்ற அதிகாரி I பிரதீப் தனது திறமைகளை வெளிப்படுத்தி அவருக்கும் இலங்கை இராணுவத்திற்கும் குறிப்பிடத்தக்க நற்பெயரை கொண்டு வந்துள்ளார்.