28th June 2024 08:45:44 Hours
அவுஸ்திரேலியாவின் அமைதி நடவடிக்கை பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் மைக்கல் வெப் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் எமண்டா ஜோன்ஸ்டன் சீஎஸ்சீ மற்றும் பார் என்டிசீ ஆகியோர் 26 ஜூன் 2024 அன்று இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகளை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். அவர்களின் வருகையின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவத்தின் தளபதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலியாவின் அமைதி நடவடிக்கை பயிற்சி நிலையத்திற்கும் இடையேயான பரஸ்பர நடவடிக்கைகள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றிய விளக்கத்தை அளித்தார்.
இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் பணிக்கான இலங்கை விமானப்படை விமானப் போக்குவரத்துப் பிரிவு குழுவின் முன் பணி பயிற்சி பாடநெறி எண். 10 இன் இறுதிப் பயிற்சியை பார்வையிடுவதற்கு பிரதிநிதிகள் குழு பயிற்சி தளத்திற்குச் சென்றது.
அவர்கள் புறப்படுவதற்கு முன், தளபதி மற்றும் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையே நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.