02nd July 2023 21:36:02 Hours
அம்பாறை போர் பயிற்சி கல்லூரியில் கற்பித்தல் முறைமை பாடநெறி - 66 ன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜூலை 1 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை போர் பயிற்சி கல்லூரியில் பதில் தளபதி கேணல் எம்கேஏடி சந்திரமால் அவர்கள் கலந்து கொண்டார்.
144 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத காலப் பயிற்சியைப் பயின்றனர். இலங்கை சிங்க படையணியை சேர்ந்த ரைபிள் சிப்பாய் எச்.எம்.எம்.எல்.கே சேனாரத்ன பாடநெறியின் சிறந்த மாணவராக விருது பெற்றார்.
பரிசளிப்பு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.