Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2024 18:31:51 Hours

அம்பாறை போர் பயிற்சி கல்லூரியினால் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஏற்பாடு

அம்பாறை போர் பயிற்சி கல்லூரி தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் போர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே மென்பந்து கிரிக்கெட் போட்டியை 2024 மே 12 அன்று அம்பாறை போர் பயிற்சி கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, 08 அணிகளில் போர் பயிற்சி கல்லூரி பணியாளர்கள், சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 51, தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி - 56, கனிஷ்ட பயிற்றுனர்கள் பாடநெறி -104 மற்றும் பயிற்றுவித்தல் முறைமை பாடநெறி -73 ஆகியவையும் அடங்கும்.

போர் பயிற்சி கல்லூரி அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டதுடன் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி பாடநெறி - 51 அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பரிசளிப்பு விழாவில் வெற்றியாளர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை போர் பயிற்சி கல்லூரி தளபதி வழங்கினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பயிற்றுனர்கள் மற்றும் சிப்பாய்கள் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்தனர்.