Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2024 10:47:45 Hours

அம்பாரையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 50'

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 50' வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 26 மார்ச் 2024 அன்று நடைபெற்றது.

2024 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024 மார்ச் 26 நிறைவடைந்த ஒரு மாத காலப் பாடநெறியில் மொத்தம் 55 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பங்குபற்றினர். பணிநிலை சாஜன் ஈ.ஜே.ஜி.ஐ. சமிந்த அவர்கள் பாடநெறியின் சிறந்த மாணவன் என்ற பட்டத்தைப் பெற்றார்.

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் எம்.கே.ஏ.டி. சந்திரமால் அவர்கள் சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.