Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2024 18:18:23 Hours

அம்பாந்தோட்டை அபிவிருத்தி திட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஹம்பாந்தோட்டை மற்றும் அதன் புறநகர்கள் பெரும் அம்பாந்தோட்டை திட்டத்தின் கீழ் பாரிய அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. முன்னேற்ற மீளாய்வு மற்றும் பிரதான திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு 12 ஜூன் 2024 அன்று ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் முக்கிய நகர திட்ட வடிவமைப்பாளர்களான சபா ஜூரோங் சிங்கப்பூர் (தனியார்) லிமிடெட், பார்வையாளர்களுக்கு அடிப்படைத் திட்டத்தை வழங்கினர். இந் நிகழ்வில் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ்.முனசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.