Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2022 19:12:47 Hours

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையரால் மறைந்த தனது நண்பனின் நினைவாக இராணுவ வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் அன்பளிப்பு

மறைந்த ஆனந்த கல்லூரி மாணவரும் பிரிகேடியருமான சுதத் உதயசேன அவர்களுக்கு நன்மதிப்பை சேர்க்கும் வகையில், அமெரிக்காவில் வசிக்கும் கொழும்பு ஆனந்த கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நான்கு அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் இலங்கையரான கெமிந்த ஜயவர்தன இன்று (12) காலை இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவைச் சந்தித்து சில மாதங்களுக்கு முன்பாக மறைந்த ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரும் தனது நண்பருமான பிரிகேடியர் சுதத் உதயசேன அவர்களின் நினைவாக 2000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அவசர சிசிக்சை பிரிவு கட்டில்ளை வழங்கி வைத்தார்.

இராணுவத் தளபதி நன்கொடையாளருக்கு தனது நன்றியை கூறிக்கொண்டதை தொடர்ந்து, இராணுவத்தின் சேவைகள் நன்கொடையாளரினால் பாராட்டப்பட்டது. அதனையடுத்து ஜெனரல் ஷவேந்திர சில்வா , திரு கெமிந்த ஜயவர்தனவுக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.

மேற்படி நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க அவர்களின் கல்லூரி நன்பரான பிரிகேடியர் சுதத் உதயசேன அவர்களின் சார்பில் அவரினால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு சுஜீவ கருணாசேகர, நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷ்யங்க ஏரியகம மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் சம்பிக்க அத்தநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.