Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2023 21:46:03 Hours

அபிமான்சல 1 ல் 'மாயா கலை நிகழ்வு

அநுராதபுரம் 'அபிமன்சல 1' இல் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் அழகியல் திறன்களைத் தட்டியெழுப்பவும், அத்தகைய கலைத்திறன்களை மேம்படுத்துவதற்கான இடத்தை அவர்களுக்கு வழங்கவும், ஆரோக்கிய ஓய்வு விடுதியின் அலுவலகத்தில் மார்ச் 15 அன்று 'மாயா கலை நிகழ்ச்சி' ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தின் கலை ஆலோசகர் திரு எம்.ஜி.ரத்னசேன அவர்கள் மறைந்திருக்கும் அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுவாரஸ்யமான நிகழ்ச்சியை நடாத்தினார். 'அபிமான்சல 1' தளபதி பிரிகேடியர் கபில சக்கரவர்த்தி இத் திட்டத்தை நடத்துவதற்கு உதவியதுடன் வருகை தந்த வளவாளரை வரவேற்றார்.