Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2023 21:45:43 Hours

அபிநவராம விகாரையின் தூபி திறப்பு

மகா சங்கத்தினரின் அழைப்பின் பேரில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் மட்டக்களப்பு கெவிலியமடுவ பன்சல்கல அபிநவராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியை ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி தினத்தன்று (ஜூலை 2) திறந்து வைத்தார்.

மஹாஓயா சிவில் பாதுகாப்பு திணைக்கள கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎல்வைஏ லக்புர அவர்களின் மேற்பார்வையின் கீழ் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், கட்டுமானத்திற்கான மனிதவளத்தை வழங்கியதுடன் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி குணவதி பெரேராவுக்கு திருமதி புஷ்பா ஹெட்டியராச்சி, திரு திருமதி பஸ்நாயக்க, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் நன்கொடையாளர் திரு. ரசிக லக்மல் மற்றும் சில வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த திட்டத்திற்கு நிதி பங்களிப்பை வழங்கினர்.

சமய வைபவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா (ஓய்வு), 231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.