19th October 2024 21:14:13 Hours
அனர்த்த முகாமைத்துவ உயர் பாடநெறி இல-12 கம்பளையில் உள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தில் 30 செப்டம்பர் முதல் 16 ஒக்டோபர் 2024 வரை நடைப்பெற்றது.
இப் பாடத்திட்டத்தில் மொத்தம் 57 மாணவர்கள் கலந்து கொண்டு அனர்த்த மீட்பு மற்றும் முகாமைத்துவ திறன்களையும் அறிவையும் மேம்படுத்தி கொண்டனர்.
இப் பாடநெறியில் சிறப்பான சாதனைகளை மற்றும் செயல்திறனை காண்பித்து இலங்கை பீரங்கி படையணியின் O/71076 கெப்டன் என்ஏஎஸ்எஸ் நாபாகொட தகுதி வரிசையில் முதலிடம் பெற்றார்.
இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மைய தளபதி கேணல் ஆர்எம்எச்பீகே ரத்நாயக்க அவர்கள் அனைத்து பங்கேற்பாளர்களின் முயற்சிகளை பாராட்டியும் அனர்த்த முகாமைத்துவ தயார்நிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் நிகழ்ச்சியின் நிறைவுரையினை ஆற்றினார்.