Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2024 16:54:12 Hours

அனர்த்த பதிலளிப்பு மற்றும் உயிர்காக்கும் பாடநெறி இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் நிறைவு

22 ஏப்ரல் 2024 முதல் 03 ஜூன் 2024 வரை நடாத்தப்பட்ட அடிப்படை அனர்த்த பதிலளிப்பு பாடநெறி எண். 22 மற்றும் 2024 மே 13 முதல் 03 ஜூன் 2024 வரை கம்பளை இராணுவ அனர்த்த பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்ட இடைநிலை உயிர்காக்கும் பாடநெறி எண் 05, ஆகியவை 2024 ஜூன் 03 அன்று வெற்றிகரமாக நிறைவுற்றன.

07 அதிகாரிகள் மற்றும் 152 சிப்பாய்கள் அடிப்படை அனர்த்த பயிற்சி நெறியில் எண். 22 பங்குபற்றியதோடு, சிங்க படையணியின் கெப்டன் எச்கேஎச்டிஜீடி குருகுலதித்த அவர்கள் தகுதி வரிசையில் முதலிடம் பெற்றார்.

அதற்கமைய 4 வது இலங்கை கவச வாகன படையணியின் சி/113085 சிப்பாய் விபீகேஎன் பத்திரன இடைநிலை உயிர்காக்கும் பாடநெறியில் தகுதி வரிசையில் முதலிடம் பெற்றார். 16 சிப்பாய்கள் இப் பாடநெறியில் பங்கேற்றனர். இராணுவ அனர்த்த பயிற்சி நிலைய தளபதி கேணல் ஆர்எம்எச்பீகே ரத்நாயக்க நிறைவுரை ஆற்றினார்.