05th June 2024 15:11:36 Hours
613 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், அத்துரலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 04 ஜூன் 2014 அன்று நில்வலா ஆறு பெருக்கெடுத்தமையை அடுத்து அமலகொட வீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான தடுப்பூசிகள் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
4 வது இயந்திவியல் காலாட் படையணியின் டபிள்யூஎம்இசட் 551பி கவச வாகனத்தின் உதவியுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் மற்றும் தடுப்பூசிகள் அத்துரலியவிலிருந்து அக்குரஸ்ஸ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு பாதுகாப்பாக செல்லப்பட்டன.
இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.