28th July 2023 19:41:05 Hours
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் அடிப்படை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடநெறி-எண் 130ல் கலந்துகொண்டவர்களுக்கு பூவெலிகட சமிக்ஞை படையணி பயிற்சி பாடசாலையில் திங்கட்கிழமை (17) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இராணுவ பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎஸ் ரத்னாயக என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. சமிக்ஞை படையணியின் பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் எம்ஏகே ஜயவர்தன பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியை வரவேற்றார்.
இந் நிகழ்வின் போது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் வெவ்வேறு படையலகுகளை சேர்ந்த 50 சிப்பாய்கள் மற்றும் 03 மகளிர் சிப்பாய்களுக்கு இலட்சிணைகள் வழங்கப்பட்டன. 11வது இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் சிப்பாய் பீடபிள்யூஜிஎம் நவரத்னவிற்கு சிறந்த மாணவர்கான பரிசு வழங்கப்பட்டது.
பிரதம விருந்தினர் புதிய சமிக்ஞை படையணி சிப்பாய்களை வாழ்த்தியதோடு அவர்களின் எதிர்கால தொழில்முறை முயற்சிகளை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு தனது ஆலோசனைகளை வழங்கினார். சிரேஷ்ட பங்கேற்பாளர்களால் வழங்கப்பட்ட பல்வேறு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அம்சங்களின் முறையான விளக்கக்காட்சியும் பிரதம அதிதிக்கு முன்பாக திரையிடப்பட்டது.
அடிப்படைதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் சான்றிதழ் பாடநெறியானது ஐம்பத்தெட்டு வேலை நாட்களில் நடத்தப்பட்டதுடன் மேலும் இது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சியை பொண்டிருந்தது. இராணுவத்தின் கட்டளை, கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்திற்குத் தேவையான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை வழங்குவதில் தகுதிவாய்ந்த பணியாளர்களாக தங்கள் கடமைகளைச் செய்ய இந்தப் பாடநெறி உதவுகிறது.