Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2024 12:28:45 Hours

அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிறைவு

அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறியானது 26 டிசம்பர் 2024 அன்று கம்பளையில் உள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

2024 டிசம்பர் 09 ஆம் திகதி முதல் இடம்பெற்ற பாடநெறியில் 21 வது இலங்கை சிங்க படையணியின் 04 அதிகாரிகள் மற்றும் 96 சிப்பாய்கள் பங்குபற்றியதுடன் பாடநெறியில் கெப்டன் ஜீஆர்எச்ஜே அருணசிறி தகுதி வரிசையில் முதலிடம் பெற்றார்.

இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலைய தளபதி கேணல் ஆர்எம்எச்பீகே ரத்நாயக்க அவர்களின் நிறைவுரையில் பாடநெறி முழுவதும் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்புக்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.