17th May 2023 20:52:14 Hours
2 வது காலாட் படைப்பிரிவின் 521 காலாட் பிரிகேட் படையினர் சமூகம் சார்ந்த பணியாக அச்சுவேலி உலவிக்குளம் கோவிலில் வெள்ளிக்கிழமை மே 12 கோவில் திருவிழாவை முன்னிட்டு சிரமதான பணியினை மேற்கொண்டனர்.
இத் திட்டத்தின் போது வளாகத்தில் உள்ள குப்பைகள் மற்றும் ஏனைய தேவையற்ற கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினர். இராணுவத்தினரின் பங்களிப்பை கோவிலின் பிரதான பூசகர் பாராட்டினார். சமூகம் சார்ந்த திட்டத்தில் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் பங்கேற்றனர்.