16th February 2025 21:58:36 Hours
இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தினால் காலி முகத்திடல் வெளிப்புற மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 97 வது தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
4 நாட்கள் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய குத்துச்சண்டை போட்டியில் 25 கழகங்களைச் சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குத்துச்சண்டை வீரர்கள் போட்டியிட்டனர்.
இலங்கை இராணுவ ஆண்கள் குத்துச்சண்டை அணி 9 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று தங்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை அடைந்தனர். பெண்கள் அணி 3 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இந்த போட்டியில் சார்ஜன் செல்லதுரை ஞாபகார்த்த கிண்ணம், முத்தையா சேவியர் ரோஸ் ஞாபகார்த்த கிண்ணம், சிறந்த குத்து சண்டை வீரர் ஆண், சிறந்த தோல்வியாளர் ஆண், சிறந்த குத்து சண்டை வீரங்கனை ஆகிய பரிசுகளுக்காக போட்டியிட்டனர்.
சிறந்த குத்துச்சண்டை வீரர் விருதை லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.பீ. தர்மசேனவும், சிறந்த தோல்வியுற்ற ஆண்களுக்கான விருதை பொம்பொடியர் எம்.எம்.எல்.பீ. ஜயவர்தனவும் பெற்றுக் கொண்டனர். போட்டியின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனைக்கான விருதை சார்ஜன்ட் எஸ்.எச். பிரியதர்ஷனி பெற்றுக் கொண்டார்.
இராணுவ குத்துச்சண்டை குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இராணுவ குத்துச்சண்டை அணி இந்த குறிப்பிடத்தக்க சாதணைகளை பெற்றுக் கொண்டது.