Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2021 20:18:29 Hours

95 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்த தானம்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பpரிவின் 231 வது பிரிகேடின் 95 க்கும் மேற்பட்ட இராணுவத்தினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இருப்பு குறைந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு இரத்தக் வங்கிக்கு (19) வெள்ளிக்கிழமை 231 வது பிரிகேட் தலைமையகத்தில் இரத்ததான வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்தம் கையிருப்பு குறைவடைந்தமையால் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த இரத்ததானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் மருத்துவ அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழு 231 வது பிரிகேட் தலைமையகத்திற்கு சென்று படையினரிடமிருந்து இரத்தத்தை சேகரித்தது.

இத் திட்டமானது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி, 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.என். கொஸ்வத்த , 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபில்யு.எம்.என்.கே.டி பண்டார, 23 வது படைப்பிரிவின் கேணல் பதவி நிலை, 23 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி ஆகியோரின் வழிக்காட்டலின் கீழ் 231 வது பிரிகேட் அதிகாரிகள் மற்றும் படையினர்களினால் இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.