15th July 2024 15:12:40 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் வெலிகந்த திம்புலான, சிங்கபுரவில் வசிக்கும் தேவையுடைய சிப்பாய்க்கு திரு. காஞ்சன மாரசிங்க அவர்களின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு 11 ஜூலை 2024 அன்று ஒரு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
9 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் எம்ஐஎஸ் சந்திரகுமார யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் முயற்சியில் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவள உதவியைப் பயன்படுத்தி இவ் வீட்டின் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் சுபநேரத்தில் பயனாளிக்கு வீட்டுச் திறப்பை கையளித்தனர். வீடு திறப்பு விழாவின் முடிவில், பயனாளிகளுக்கு சில வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உலர் உணர்வு பொதிகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.