02nd February 2024 15:48:10 Hours
புதுக்குடியிருப்பு சுதந்திபுரம் "அன்னைபூரணி" பாலர் பாடசாலையில் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமையலறை மற்றும் உணவகத்தை 29 ஜனவரி 2024 அன்று 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் திறந்து வைத்தனர்.
வைத்தியர் ஸ்ரீயானி விக்கிரம நாயக்க அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் "மிராக்கிள் ரெஸ்டோரேஷன் மினிஸ்ட்ரீஸ் இன்கார்ப்பரேட் ஆஸ்திரேலியா" வின் உதவியில் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் சமையலறை மற்றும் பாடசாலைக்கு முழு வசதியுடனான உணவகத்தை நிர்மாணித்தனர்.
இத் திட்டம் மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதலில் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச் பீ ஐ குமார அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. திறப்பு விழாவில் 593 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.