Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2023 17:05:33 Hours

9 வது இலங்கை தேசிய பாதுகாலவர் படையினர் ஊனமுற்ற பிள்ளைக்கு சக்கர நாற்காலி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் வெசாக் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (மே 05) முல்லைத்தீவு சுகந்திபுரத்தில் வசிக்கும் 07 உறுப்பினர்களைக் கொண்ட வரிய குடும்பத்தின் 15 வயது ஊனமுற்ற பிள்ளைக்கு புதிய சக்கர நாற்காலியை அன்பளிப்பு செய்தனர்.

படையினர் சக்கர நாற்காலியை அவர்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் சென்று பெற்றோரிடம் கையளித்தனர். 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி, 681 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்டிபீ குணதுங்க மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்பீஐ குமார ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நிதியுதவியின் கீழ் சக்கர நாற்காலி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 9 வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.