03rd October 2024 15:36:18 Hours
222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்.கே.எஸ் திலகரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 9 வது விஜயபாகு காலாட் படையணி 25 செப்டம்பர் 2024 அன்று ஸ்ரீ சித்தர வேலாயுதம் சுவாமி கோவிலில் சிரமதானப் பணியை மேற்கொண்டது.
இந்த முயற்சி ஏராளமான பக்தர்களின் பங்குபற்றலுடன் செப்டெம்பர் 11 முதல் 18 வரை நடைபெற்ற வருடாந்த பூஜையின் பின்னர் கோயில் வளாகம் குப்பைகளால் மாசடைந்து காணப்பட்டது. 222 வது காலாட் பிரிகேட் தலைமையகம், 9 வது விஜயபாகு காலாட் படையணி, 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி ஆகியவற்றின் படையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.