Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 04:00:59 Hours

9 வது கஜபா படையணியினரால் கிரிப்பன்வெவ பகுதியில் உள்ள 'டி' கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது

கிரிப்பன்வெவவில் அமைந்துள்ள 622 வது பிரிகேட்டின் கீழ் உள்ள 9 வது பட்டாலியன் கஜபா படையணியின் படையினர் பெரும் போக நெற்செய்கைக்கு அவசியமான தண்ணீரினை எடுத்துச் செல்ல உதவும் 1.5 கிமீ நீளம் கொண்ட கிரிபான்வெவ "டி" கால்வாய்யினை சுத்தம் செய்யும் பணிகளில் வியாழக்கிழமை (7) திகதி ஈடுபட்டனர்.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், இத்திட்டம் படையினரால் வெற்றிகரமானதாக முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டமானது 9 வது கஜபா படையணியின் நாற்பது சிப்பாய்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது கிரிப்பன்வெவ தர்ம பிரதீப பிரிவேன அமைப்பின் 16 புத்த பிக்குகள் மற்றும் கிரிப்பன்வெவ கிராம உத்தியோகத்தர், கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபை பிரவு முகாமையாளர், மகாவலி எல் வலய திட்ட பொறியியளாளர், உள்ளூர் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 40 விவசாயிகளும் இத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.