Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th September 2023 20:17:17 Hours

8 வது படையணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நிறைவு

செப்டெம்பர் 8 முதல் 10 ஆம் திகதி வரை பனாகொட, இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையின் உடற்பயிற்சிகூடத்தில் இடம்பெற்ற படையணிகளுக்கு இடையிலான கைப்பந்தாட்டப் போட்டியில் 2 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி உட்பட இராணுவத்தின் 13 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 208 விளையாட்டு வீர வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 10) இடம் பெற்ற நிறைவு விழாவில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ கைப்பந்தாட்ட குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இறுதிப் போட்டிகளின் போது, இலங்கை இராணுவ மகளிர் படையணி சம்பியன்ஷிப்பைத் தனதாக்கிக் கொண்டதுடன் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி (42 - 15 புள்ளிகள்) இரண்டாம் இடத்தை பெற்றது.

ஆடவர் பிரிவில் பரபரப்பான இறுதிப் போட்டியில், இலங்கை இராணுவ சிங்க படையணி படையினர் விஜயபாகு காலாட் படையணிக்கு எதிராக 23 - 22 என்ற புள்ளிகள் கணக்கில் சம்பியனாகியது.

மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விறுவிறுப்பான போட்டியை சிரேஷ் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கண்டுகளித்தனர்.

தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:

சிறந்த வீரர் (ஆண்கள்) – அதிகாரவாணையற்ற அதிகாரி II டபிள்யூஆர்ஆர்ஐ பிரியதர்ஷன இலங்கை சிங்க படையணி

சிறந்த வீராங்கனை – பணி நிலை சார்ஜன் எம்என்சிகே பிரேமசிறி- இலங்கை இராணுவ மகளிர் படையணி

சிறந்த இலக்குக்கு எறிதல் (ஆண்கள்) - சிப்பாய் எஸ்டபிள்யூஎம் தீபால்- விஜயபாகு காலாட் படையணி

சிறந்த துப்பாக்கி சுடுதல் (பெண்கள்) - லான்ஸ் கோப்ரல் எம்யு மஹாராச்சி- இலங்கை இராணுவ மகளிர் படையணி

சிறந்த காப்பாளர் (ஆண்கள்) - கோப்ரல் எஸ்.பீ.எஸ்.எம் அமரசிங்க- இலங்கை சிங்க படையணி

சிறந்த காப்பாளர் (பெண்கள்) - லான்ஸ் கோப்ரல் எஎம்எஎஸ் விஜேரத்ன - இலங்கை இராணுவ மகளிர் படையணி