Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2024 16:36:19 Hours

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரால் தமனவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் அம்பாறை, தமனவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.

241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 242 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேபீஎல் அமுனுபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் 2024 ஒக்டோபர் 09 அன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இடிஎஸ்கே தெனியாய அவர்களின் மேற்பார்வையின் கீழ், அனுசரனையாளர்களின் நிதி உதவியுடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், திரு.கெமுனு பெரேராவின் நிதியுதவியுடன், 242 வது காலாட் பிரிகேட் தளபதியின் ஒருங்கிணைப்பில் கிராமத்தின் 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அத்தியாவசிய மகப்பேறு பொருட்கள் வழங்கப்பட்டன.