27th November 2024 20:16:38 Hours
சீரற்ற காலநிலை காரணமாக, திருக்கோவில் பிரதேசத்தில் வீதிகளை துப்பரவு செய்தல், விழுந்த மரங்களை அகற்றுதல் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு உதவுதல் போன்ற பணிகளை 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் மேற்கொண்டனர். இந்த அனர்த்த முகாமைத்துவ மீட்பு நடவடிக்கை 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈடிஎஸ்கே தெனியாய அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.