Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 21:04:40 Hours

8 வது இலங்கை சிங்கபடையினரால் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது பிரிகேடின் 8 வது இலங்கை சிங்க படையணி படையினரால் கேகாலை உடமகடவர கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவ தலைவர்கள் உட்பட 50 மாணவர்களுக்கு சனிக்கிழமை (01) 'தலைமைத்துவம்' தொடர்பில் பயிற்சி வழங்கப்பட்டது.

தலைமைத்துவ நிகழ்ச்சி நிரலில் விரிவுரைகள், உள்ளக மற்றும் வெளிப்பயிற்சிகள் மற்றும் செயன்முறை விளக்கங்கள் என்பன உள்ளடக்கி இருந்தன. இந்த அமர்வுகள் மாணவர்களுக்கு யதார்த்தமான பயிற்சி அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் மேலும் அவர்கள் தலைமைத்துவக் தொடர்பில் அனுபவங்களையும் பெற கூடியதாக இருந்தது.

இந் நிகழ்ச்சி திட்டமானது பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன் 61 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. 611 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி இந் நிகழ்ச்சியினை மேற்பார்வையிட்டனர்.