03rd March 2024 17:08:32 Hours
28 பெப்ரவரி 2024 அன்று பிஎஸ்பீ மெண்டிஸ் அண்ட் கம்பெனி (தனியார்) லிமிடெட்க்கு சொந்தமான கடுவெல கிரேஜின் பைப்லைன் தளத்தில் இல் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க 8 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணி கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்புப் படைகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டது.
செய்தி கிடைத்ததும் 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் 07 அதிகாரிகள் மற்றும் 57 சிப்பாய்களைக் கொண்ட குழு அந்த இடத்திற்கு விரைந்தது. அவர்கள் தங்கள் ஒருங்கிணைந்த முயற்சியால் அப்பகுதியில் கவனம் மற்றும் பாதுகாப்பையும் உறுதிசெய்து தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர். 8 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் வைடிஎன் டி சில்வா இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டார்.