10th October 2024 15:55:57 Hours
8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் குட்டிவில, கிரிந்திவெல பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு அனுசரனையாளர்களின் உதவியுடன் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இப்புதிய வீடு 09 ஒக்டோபர் 2024 அன்று ஒரு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, கட்டுமானப் பணிகளுக்காக 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் பணியாளர்களின் உதவியைப் பயன்படுத்தி இந்த வீட்டை முடிக்க முயற்சியை மேற்கொண்டார். நிகழ்வில் வீட்டுச் சாவிகள், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஷ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் பயனாளியிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.