Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2024 18:20:33 Hours

79வது சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தன்சானியாவில்

79வது சர்வதேச இராணுவ விளையாட்டு சபை 2024 மே 12 முதல் 19 வரை தன்சானியாவின் டார் எஸ் சலாமில் 140 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதியும் இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபை தலைவருமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை பிரதிநிதித்துவபடுத்தி விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.ஏ.டி கொடவத்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ மற்றும் இலங்கையைச் சேர்ந்த முப்படை அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள 80வது சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தலைவர் கேணல் நில்டன் கோம்ஸ் ரொலிம்ஃபில்ஹோ மற்றும் பிரிகேடியர் ஜி.ஏ.டி கொடவத்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வு இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் வரலாற்றில் ஒரு சிறப்பு மைல்கல்லாக அமைந்தது.