06th February 2025 15:13:46 Hours
77வது தேசிய சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இணங்க, "தூய இலங்கை" திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் கடற்கரை மற்றும் சாலை சுத்தம் செய்யும் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2025 பெப்ரவரி 3, அன்று, 522 வது காலாட் பிரிகேட்டின் 10வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் கட்டைக்காடு கடற்கரையினை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டன. அதே நாளில், 23வது கெமுனு ஹேவா படையணி பொதுமக்களுடன் இணைந்து, பளை ரயில் நிலையத்தில் ஒரு தூய்மைபடுத்தும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த திட்டங்கள் 52 வது காலாட் படைபிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 522 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 10 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 243 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 பெப்ரவரி 3 திகதி கல்லடி கடற்கரையினை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன், ஆனையிறவு முதல் இயக்கச்சி சந்தி வரையிலான ஏ-09 வீதியில் 1 வது இயந்திரவியல் காலாட் படையணி, 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி, உள்ளூர் பாடசாலைகள் மற்றும் கிராம மக்களின் பங்கேற்புடன் சாலை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2025 பெப்ரவரி 2, அன்று, கற்பிட்டி பிரதேச சபையின் கண்டகுளிய கடற்கரையினை சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி தலைமையில், 143 வது காலாட் பிரிகேட்டின் 200 வீரர்கள், 16 மற்றும் 7 வது (தொ) வது கஜபா படையணி கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து இந்த திட்டத்தில் பங்கேற்றனர்.