Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2024 19:10:10 Hours

75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இராணுவத்தினால் குறைவருமான குடும்பங்களின் வீடுகள் புனரமைப்பு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2 வது பொறியியல் சேவைகள் படையணி படையினர், அனுராதபுரம், திஸாவெவ மேற்கில் உள்ள தேவையுடைய குடும்பம் ஒன்றின் வீட்டை புனரமைத்துள்ளனர். 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற வீடு வழங்கும் நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த புனரமைப்பு திட்டம் வன்னி வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஏ பீரிஸ் பீடிஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2 வது பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.எம்.எஸ்.ஜே பண்டார அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

அதே சமயம், 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர், மான்கடவளையிலுள்ள தேவையுடைய குடும்பத்தின் வீட்டை புனரமைத்து அதே நாளில் பயனாளியிடம் கையளித்தனர். இத்திட்டம் 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.ஜி.டி.சி. சிகுராஜபதி யூஎஸ்பீ பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, பரசங்கஸ்வெவ பிரதேசத்தின் தேவையுடைய குடும்பத்தின் புனரமைக்கப்பட்ட தீடும் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இத்திட்டம் 2 2 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.ஜி.இ.எம் அபேகோன் பீஎஸ்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.