06th October 2024 16:12:17 Hours
எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இறுதி சமய நிகழ்வாக இரவு முழுவதுமான பிரித் பாராயண நிகழ்வு 2024 ஒக்டோபர் 5 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதி புனித நினைவுச் சின்னத்தை ஏந்திச் சென்றதுடன், பாரம்பரியமான 'பிருவான போத' (பழைய வேதங்கள் அடங்கிய புத்தகம்) பதவி நிலை பிரதனி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் எடுத்துசென்றார். அத்துடன் வணக்கத்திற்குரிய தேரர்கள் ஒளியேற்றப்பட்ட பிரித் மண்டபத்திற்கு (பிரித் மண்டபய) அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு இராணுவத் தளபதி மகா சங்க உறுப்பினர்களுக்கு அடையாளமாக சம்பிரதாயத்திற்கு அமைய தாம்பூலம் வழங்கினார். 75 வது ஆண்டு நிறைவின் ஆசிர்வாதம் பெறுவதற்காக இரவோடு இரவாக பிரித் பராயணம் இடம்பெற்றது.
கங்காராமய விகாரையின் பிரதமகுருவான வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் சமய நிகழ்வில் முக்கிய பங்காற்றினார். சிவனொளிபாத மலையின் பிரதமகுருவான பெங்கமுவே தம்மதின்ன தேரர் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக இராணுவத்தைப் பாராட்டி, அதன் எதிர்காலத்திற்கான ஆசீர்வாதங்களைத் தெரிவித்து, சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இராணுவ பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கோட்டே அத்தியாயத்தின் மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி இட்டப்பன தம்மாலங்கார தேரர் உட்பட வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு ‘ஹீல் தான’ அன்னதானம் வழங்கியதுடன் நிகழ்வு நிறைவடைந்தது. ருவன்வெலிசாய விகாரையின் பிரதமகுருவான வணக்கத்திற்குரிய ஈத்தலவெடுனவெவே ஞானதிலக தேரர் 2024 ஒக்டோபர் 6 ஆம் திகதி காலை அன்னதானத்தை வழங்கினார்.
நிகழ்வின் போது, இராணுவத் தளபதி, ஜெனரல் சி.எஸ்.வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ (ஓய்வு) மற்றும் திருமதி லலி கொப்பேகடுவ ஆகியோருக்கு அவர்களின் பங்கேற்பைப் பாராட்டி விசேட நினைவுச் சின்னம் வழங்கினார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், முன்னாள் இராணுவத் தளபதிகள், அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.