Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2023 23:04:08 Hours

74 வது மிஸ்டர் ஸ்ரீலங்கா தேசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் 2023 இல் இராணுவ உடற்கட்டமைப்பு வீரர்களுக்கு 2 தங்க பதக்கங்கள்

இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த 74 வது மிஸ்டர் ஸ்ரீலங்கா தேசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் 2023 இல் பங்குபற்றிய இராணுவ உடற்கட்டமைப்பு வீரர்கள் 2 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இப் போட்டிகள் மார்ச் 26 அன்று கொழும்பு டவர் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை இராணுவ அணி உட்பட நாடளாவிய ரீதியில் 9 விளையாட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஏழு எடைப் பிரிவுகளின் கீழ் (60, 65, 75, 75, 80, 85 மற்றும் 90 கிலோகிராம்) மொத்தம் 377 உடற்கட்டமைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.2 வது (தொ) இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்வைடபிள்யூ புஷ்பகுமார போட்டிகளில் இரண்டாவது சிறந்த வீரருக்கான கிண்ணத்தினை வென்றார்.