Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th October 2022 10:56:10 Hours

73 வது இராணுவ தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் இராணுவ அமைப்புகளில் சிறப்பு நிகழ்வுகள்

இராணுவத் தலைமையகத்தில் (ஒக்டோபர் 10) இடம்பெற்ற 73 வது இராணுவ ஆண்டு விழாவில் தளபதியின் வாழ்த்து செய்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ அமைப்புகளும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவு தலைமையகத்தினரால் இராணுவ தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (10) கோப்பாய் பிரதேசத்தின் 75 வறிய குடும்பங்களுக்கு 75 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு 52 வது படைப்பிரிவு தளபதி படையினருடன் இணைந்து நிதியுதவி வழங்கியுருந்தார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் ஆலோசனைக்கமைய 52 வது படைப்பிரிவு தளபதி மற்றும் படையினரால் இப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நன்கொடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

52 வது படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வினை யாழ்/கரம்பகுறிச்சி ஆரம்ப பாடசாலை மற்றும் வரணி மத்திய கல்லூரி மாணவர்களின் கலாசார நடன நிகழ்வுகள் அலங்கரித்ததுடன் பயனாளிகளையும் மகிழ்ந்தனர்.

52 வது படைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தலா 5000/= பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்கினார். யாழ்/கரம்பக்குறிச்சி ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு.கண்ணதாசன், எழுதுமட்டுவாழ் கிராம உத்தியோகத்தர் திரு ராஜ் சுதாகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, குண்டசாலை 11 வது படைப்பிரிவு தலைமையகத்தின் படையினரால் கடந்த திங்கட்கிழமை (10) இராணுவ கொடி ஏற்றி, இராணுவ கீதம் பாடி, தாய்நாட்டின் ஒற்றுமைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இராணுவ தினம் செய்தியும் வாசிக்கப்பட்டது. அத்துடன் தலைமையகத்திலுள்ள மூலிகைத் தோட்டத்தில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், அனைத்து படையினருக்கும் மதிய விருந்தும் வழங்கப்பட்டது.

மேலும், 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிஎஸ் கல்ப சஞ்சீவ அவர்களால் இராணுவ தினத்தை முன்னிட்டு தலைமையக வளாகத்தில் நவீனமயப்படுத்தப்பட்ட விரிவுரை மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தரவின் ஏற்பாட்டில், யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு திங்கட்கிழமை (10) கொண்டாட்டப்பட்டது.

அத்துடன், யாழ்.பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் இராணுவ கொடி ஏற்றுதல், இராணுவப் கீதம் பாடல், வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துதல், தளபதியின் செய்தி வாசிப்பு, மரக்கன்றுகள் நடும் திட்டம் மற்றும் சகல தரப்பினருக்கும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றன. இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் தம்மிக்க கருணாபால, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் அனுர பண்டார ஆகியோருடன் இணைந்து படையினரால் மூலிகை தோட்டத்தில் மூலிகை கன்றுகள் நாட்டப்பட்டன.

இதோபோல் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வாவின் தலைமையில் திங்கட்கிழமை (10) மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் 73 வது இராணுவ ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதற்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திலும் இராணுவ கொடி ஏற்றுதல், இராணுவப் கீதம், வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துதல், தளபதியின் செய்தி வாசிப்பு மற்றும் சகல தரப்பினருக்கும் மதிய உணவு வழங்குதல் போன்றவை இடம்பெற்றன.

மேலும், தியத்தலாவ வனவிலங்குகள் திணைக்களத்தின் எல்லைக் காரியாலயத்தின் அதிகாரி ஒருவரின் ஆதரவுடன் முப்படையினரால் பலா, மருதை, இழுப்பை மற்றும் பல வகையான மரக்கன்றுகள் முகாம் வளாகத்தினுள் நடப்பட்டன. அதேபோன்று, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் கஹாகொல்ல ஸ்ரீ ஞானராம மடாலயத்தில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இராணுவ தினத்தை முன்னிட்டு மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

இதேவேளை, கொஸ்கம சாலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் 73 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு கொடி ஏற்றுதல், இராணுவ கீதம், வீரமரணம் அடைந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துதல், தளபதியின் செய்தி வாசிப்பு மற்றும் சகல தரப்பினருக்கும் மதிய உணவு வழங்குதல் போன்றன சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

அதே சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் இராணுவ தினத்தில் இராணுவத் தளபதியினால் அடுத்த நிலைக்கு உயர்தப்பட்ட 93 அதிகாரிகள் மற்றும் 2769 படையினருக்கு மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேஜர்களாகவும், கெப்டன்களாகவும் நிலை உயர்வு பெற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி அவர்களால் சிறப்பு அதிகாரப் பதக்கம் வழங்கப்பட்டது.

இராணுவத் தின கொண்டாட்டத்தின் முதல் பகுதியின் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதித் தளபதியான மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்கள் கலந்துகொண்டதுடன், பிரதம பதவி நிலை அதிகாரிகள், மற்றும் பிரிகேடியர் வழங்கல் ஆகியோரும் கலந்துகொண்டனர். இராணுவ தொண்டர் படையணி தளபதி நிகழ்வின் இறுதி கட்டமாக அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டார்.

இதேவேளை, வவுனியா பெரியவலையன்கட்டு 15 (தொ) இலங்கை சிங்கப் படையணி படையினரகளால் 73 வது இராணுவ ஆண்டு நிறைவையொற்றி விசேட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விதைத்ததுடன் முகாம் வளாகத்தில் 200 தென்னங்கன்றுகளையும் நாட்டினர். இந் நிகழ்வில் 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, மேஜர் ஆர்எம்ஜேபி ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அதேவேளை மன்னார் பேசாலையில் அமைந்துள்ள 543 வது பிரிகேட் தலைமையகத்தினரால் 73 வது இராணுவ தினத்தை நினைவுகூரும் வகையில் மன்னார் பொதுப் பிரதேசத்தில் வசிக்கும் 100 வறிய குடும்பங்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இத் திட்டமானது, 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர மற்றும் 543 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் துஷார ஹரஸ்கம ஆகியோரின் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இத் திட்டத்திற்கான நிதியுதவியினை சாந்தி சமூக அனிமேஷன் இயக்கத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவ ரத்நாயக்க, கூல் மேன் ஐஸ் தொழிற்சாலை, 11 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் மற்றும் 4 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் இணைந்து வழங்கினர்.

இதற்கிடையில், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினருடன் 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் இணைந்து 73 வது இராணுவ தினத்தை முன்னிட்டு அண்ணாமலை - அம்பாறை மரநாதா மற்றும் பல்துவார் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் 100 சிறார்களுக்கு இலவச மதிய உணவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வும் வழங்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலுக்கமைய, 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர அவர்களின் பணிப்புரையின் பிரகாரம் 241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபயகோன் அவர்களின் கண்கானிப்பில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, 73 வது இராணுவ தினத்தில் இலங்கை பீரங்கி படையணியின் 17 அதிகாரிகள் மற்றும் 680 சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு நிலை உயர்த்தப்பட்டதுடன் இலங்கை பீரங்கி படையணியின் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க 2022 ஒக்டோபர் 10 ஆம் திகதி பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அவர்களுக்கு சின்னங்களை அணிவித்து வைத்தார். மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க ஆகியோரும் இந் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

73வது இராணுவ தினத்தை முன்னிட்டு, கேகாலை மாவட்டத்தில் உள்ள கலபிடமடையில் அமைந்துள்ள பேரகும்பா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய இணைய தள இணைப்புகளுடன் கூடிய இரண்டு புதிய டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் மின்சார நீர் பம்ப் ஒன்று செவ்வாய்க்கிழமை (11) 611 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பாகொட அவர்களின் வழிகாட்டலின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது. இந்த உன்னத பணிக்கு அமெரிக்காவை வசிபிடமாக கொண்ட புலம்பெயர்ந்த திருமதி பிரியந்தி கமகே முழு அனுசரணை வழங்கினார்.

இராணுவ தினத்தை முன்னிட்டு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 61வது படைப் பிரிவின் 613வது பிரிகேட் படையினரால் கருணாரத்ன முதியவர் இல்லத்தில் உள்ள 45 முதியவர்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை, 73வது இராணுவ தினத்தை முன்னிட்டு 23 வது படைப் பிரிவின் 233 வது பிரிகேட் படையினர் ஞாயிற்றுக்கிழமை (10) வாகரை பொதுப் பகுதியில் உள்ள கடற்பரப்பில் பலா மரக்கன்றுகளை நட்டதுடன் கரையோரப் பகுதிகளில் சிரமதான பணியை முன்னெடுத்தனர். இத் திட்டமானது 23 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்கே, 233 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே ஆகியோரின் கட்டளையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோன்று, 6 வது கஜபா படையணியின் படையினர் வாழச்சேனை வைத்தியசாலை, வாகரை கடற்கரை பகுதியில் தூய்மையாக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (9) முன்னெடுத்ததுடன், மரக்கன்று நடும் பணியை திங்கட்கிழமை (10) மேற்கொண்டனர்.

உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையை தூய்மை படுத்தும் பணியை மேற்கொண்டனர். அத்துடன் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் திங்கட்கிழமை (10), சிங்கபுர கெமுனு மகா விகாரையில் போயா தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற சில் பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக முகாம் வளாகத்தில் உள்ள விகாரையில் போதி பூஜை பிங்கம ஞாயிற்றுக்கிழமை (09) மாலை ஆரம்பமானது. அதற்கமைய இராணுவ தினத்தை முன்னிட்டு வெலிகந்தவில் உள்ள தலைமையக வளாகத்தில் பொது பணி பிரிகேடியர் சுஜீவ ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் இராணுவக் கொடி ஏற்றப்பட்டு இராணுவப் கீதம் பாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தாய்நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த அனைத்துப் போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், 73 வது இராணுவ தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இராணுவத் தளபதியின் செய்தியும், பணி நிலை அதிகாரி (நிர்வாகம்) லெப்டினன் கேணல் லால் பிரமச்சந்திர அவர்களால் வாசிக்கப்பட்டது.

பின்னர், படையினரால் வெலிகந்தயில் உள்ள வழுகரமய விகாரையில் சிரமதான பணிகள் மேற்கொண்டதை தொடர்ந்து முகாமில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அனைவரும் மதிய உணவிருந்துபசாரத்தில் இணைந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பிற்பகல் கிரிக்கட் போட்டி இடம்பெற்றுதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் சுஜீவ ஜயசிங்க அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டது.

231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களின் கண்காணிப்பில் 4 வது கெமுனு ஹேவா படையணி முகாமின் படையினர் 73 வது இராணுவ தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (10) உண்ணாச்சி பிரதேசத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

இந்த நன்கொடை பிரதேசத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து ரூபாய் 4,000/= பெறுமதியான 40 உலர் உணவுப் பொதிகள், ‘மீனவர் சங்க’ மண்டப வளாகத்தில் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுடன், 231 வது பிரிகேட்டின் பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் தம்மிக்க வீரசிங்க, 4வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் மேனக குணரத்ன , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர். படையினர் தங்கள் திட்டத்திற்கு சொந்த வளங்களைப் பயன்படுத்தினர்.

இதேவேளை, அம்பாறை அண்ணாமலை கிராமிய வைத்தியசாலை வளாகத்தில் 16வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் ‘சிரமதான’ பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.இதன்படி, 73வது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (10) இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் மஞ்சுள அலவத்த, பல அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களின் முன் முயற்ச்சியால் இந் நிகழ்வு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்பன குறிப்பிடதக்கதாகும்.

73 வது இராணுவ தினத்தை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22 வது படைப் பிரவு மற்றும் 221 வது பிரிகேட் படையினரால் திங்கட்கிழமை (10) திருகோணமலையில் உள்ள ‘ரேவத’ சிறுவர் இல்லத்தில் உள்ள 30 சிறுவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. அதே நேரத்தில், சிறுவர் நிலையத்திற்கு அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. அத்துடன் படையினரால் வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி, அந்த அனாதை குழந்தைகளை மகிழ்வித்தது. அதே திட்டத்தின் கீழ் இங்கு பணி புரியும் ஐந்து ஊழியர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

அதேபோன்று, இலங்கையின் 73வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் இணைந்து திம்புலாகல வன மடாலயத்தில் நடைபெற்ற மாபெரும் 'போதி பூஜை' பிங்கம நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதன்படி, திம்புலாகல ஆரண்ய சேனசன் விகாரையின் பிரதம பிக்கு அப்பகுதிக்கு அருகிலுள்ள விகாரைகளில் வசிக்கும் 50 பிக்குகளுடன் இணைந்து வியாழக்கிழமை (13) படையினருக்கு ‘போதி பூஜா பிங்காமை’ நடத்தி ஆசீர்வாதங்களை வழங்கினார்.

இவ் ஆசிர்வாத நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் பிரபாத் ஹல்பகே உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்களது பங்களிப்பை வழங்கினர்.