21st August 2023 21:58:09 Hours
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவையாற்றும் 7 வது விஜபாகு காலாட் படையணியின் படையினர் கோவில் குடியிருப்பு அம்மன் கோவிலின் அதன் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை (ஓகஸ்ட் 19) வளாகத்தை சுத்தம் செய்தனர்.
தமிழர்களுக்கும் படையினருக்கும் இடையில் நிலவும் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் நோக்குடன் 7 வது விஜபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் இச் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்பட்டது.
7 வது விஜபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கு பற்றினர்.