Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2023 22:02:09 Hours

7 வது பீரங்கி படையினரால் கதுருவெலயில் டெங்கு தடுப்பு திட்டம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 231 வது காலாட் பிரிகேட்டின் 7 வது பீரங்கி படையணியின் படையினரால் கதுருவெல நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 24) டெங்கு தடுப்பு திட்டத்தை முன்னெடுத்தனர்.

இந் நிகழ்வில், 01 அதிகாரியும் 7 வது பீரங்கி படையணியின் 50 சிப்பாய்களும் இத் திட்டத்தை பங்குபற்றியதுடன், பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல தொண்டர்கள், பிரதேச மக்களும் பங்குபற்றினர்.