05th March 2025 11:53:31 Hours
7 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி, 2025 மார்ச் 04 அன்று 7 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி கேட்போர்கூடத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விரிவுரையை நடாத்தியது.
இந்த விரிவுரைக்கு கொழும்பு மாவட்டத்திற்கான தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் போதைப்பொருள் தடுப்பு கல்வி மற்றும் தகவல் அதிகாரி திருமதி துல்ஷானி தாரக்கா தலைமை தாங்கினார்.
கொழும்பு பிரிவு புனர்வாழ்வு அதிகாரி விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் கேணல் டப்ளியூ.ஏ.என்.டி ஜயசுந்தர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விரிவுரையில் பங்கேற்றனர்.