07th May 2024 18:33:44 Hours
7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியில் 2024 ஏப்ரல் 19 ம் திகதி "ஒரு தொண்டர் படையணியாக காலாட் படையணி வகிபங்கு மற்றும் எதிர்கால பணிகள்" என்ற கருப்பொருளில் அதன் ஆரம்ப படையலகு கருத்தரங்கு மற்றும் உணவக கழக நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
இக் கருத்தரங்கில் வரலாற்று தாக்கங்கள் முதல் படைப்பிரிவின் சமகால பங்கு வரையிலான தலைப்புகள் ஆராயப்பட்டன, ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, வைத்தியர் மனோஜ் சஞ்சீவ பெர்னாண்டோ எம்பிபிஎஸ், எம்பில் அவர்கள் விருந்தினர் விரிவுரையாற்றினார். .இவ்விரிவுரை அறிவுசார் சொற்பொழிவு மற்றும் சமூக தொடர்பு மூலம் கவச வாகன அதிகாரிகளின் எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இலங்கை கவச வாகன படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.