Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2024 17:45:50 Hours

7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியினால் மடகம ஆரம்பப் பாடசாலை பிள்ளைகளுக்கு உதவி

7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினர்'அத்த ஹித்த - 2024' திட்டத்தின் கீழ் கெக்கிராவ மடகம ஆரம்ப பாடசாலையில் பாடசாலைப் பொருட்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சியை 04 மே 2024 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

திரு.பிரசாத் லொகு பாலசூரிய அவர்களினால் இந்த நன்கொடை திட்டம் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டதுடன், இத்திட்டத்திற்கு திரு.சிந்தக அபேசேகர, திருமதி.தேஜா கபுருகே மற்றும் திரு.சங்க ஜயமால் கருணாரத்ன ஆகியோர் தேவையான நிதியுதவியை வழங்கினர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கெக்கிராவ மடகம ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பாடசாலை பொருட்களை பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர். மாணவர்களின் மனதைக் கவரும் நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நிகழ்வை மேலும் வண்ணமாக்கின.

21 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ்எச் ஹேவகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சீடிஎஸ், அதிகாரிகள், சிப்பாய்கள், பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.