07th October 2024 16:59:25 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 563 வது காலாட் பிரிகேட் தளபதி வை.எம்.எஸ்.சீ.பி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 7 வது இலங்கை சிங்க படையணியின் மேஜர் எம்.கே.டி.பீ.பீ.கே. கன்கானிகே ஆர்டபிள்யூபீ அர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் 7 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஓமந்தை நாவற்குள பிரதேசத்தின் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீட்டை 5 ஒக்டோபர் 2024 அன்று நிர்மாணித்து முடித்தனர்.
இத்திட்டம் அப்பகுதியில் உள்ள அனுசரனையாளர்களின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் வீடு திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.